தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு அரசாணையை கண்டித்து, முதலமைச்சர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ மனு! - முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்த ஜாக்டோ ஜியோ குழு

சென்னை: தமிழ்நாடு அரசாணையை கண்டித்து ஜாக்டோ ஜியோ உயர்மட்டகுழு உறுப்பினர்கள் முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Jakdo Geo petition in chief minister's office
ஜாக்டோ ஜியோ குழு

By

Published : Jul 9, 2020, 1:55 AM IST

சென்னை ஜாக்டோ ஜியோவின் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பேட்ரிக் ரெய்மாண்ட், ரவிச்சந்திரன் ஆகியோர் தமிழ்நாடு அரசின் அரசாணையை விமர்சித்து ஊடகங்களில் கருத்து தெரிவித்தார்கள்.

இதற்காக, கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கும் வகையிலும், மற்ற அமைப்புகளுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையிலும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கையான 17(b) குறிப்பாணையை உடனடியாக ரத்து செய்யக் கோரி ஜாக்டோ ஜியோ சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, வெங்கடேசன் ஆகியோர் நேரில் வழங்கினர்.

இந்நிகழ்வின்போது தமிழ்நாடு கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் வினோத்குமார் உடனிருந்தார்.

இதையும் படிங்க: திருப்பத்தூரில் கரோனாவால் ஒரு உயரிழப்பு கூட ஏற்படவில்லை'- ஆட்சியர் சிவனருள்!

ABOUT THE AUTHOR

...view details