தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை!

Lottery Martin: கோவையில் பிரபல தொழிலதிபரான லாட்டரி மார்ட்டின் தொடர்பான இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்

கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2023, 12:32 PM IST

கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

கோயம்புத்தூர்:துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் பிரபல தொழிலதிபர் மார்ட்டின் வீடு உள்ளது. அதன் அருகில் மார்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற பெயரில் கார்ப்பரேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு மாநிலங்களில் லாட்டரி தொழில் நடத்தி கொடிகட்டி பறப்பவர், மார்ட்டின். கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் லாட்டரி என்றால் மார்ட்டின் நிறுவனம் என கூறும் அளவுக்கு மிகவும் பிரபலம்.

இந்த நிலையில், இன்று மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். லாட்டரி விற்பனையில் விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும், கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது வழக்குப் பதிவு செய்தது.

இதனையடுத்து, பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மீது வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர்‌. இதன் அடிப்படையில் ஏற்கனவே மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி சோதனை நடத்தினர்.

அதேநேரம், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை சோதனை செய்தததில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் தொழிலதிபர் லாட்டரி மாட்டின் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திமுக எம்.பி ஆ.ராசாவின் 15 பினாமி நிறுவன சொத்துக்களை கையகப்படுத்திய அமலாக்கத்துறை!

ABOUT THE AUTHOR

...view details