தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாத்திரையில் இருந்த இரும்புக் கம்பி; அதிர்ச்சியில் வாடிக்கையாளர்! - Iron rod in the tablet

கோயம்புத்தூர் : மருந்துக் கடையில் பல் வலிக்காக வாங்கிய மாத்திரையில் சின்ன கம்பி இருப்பதை கண்ட வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பல் வலி மாத்திரையில் இருந்த கம்பி

By

Published : Sep 18, 2019, 6:19 PM IST

கோயம்புத்தூரில், பல் வலிக்காக முஸ்தபா என்பவர் அப்பகுதியில் உள்ள மருந்துக் கடை ஒன்றில் மாத்திரை வாங்கினார். வாங்கிய ஒரு மாத்திரையில் சின்ன கம்பி ஒன்று இருந்ததைப் பார்த்த அவர் அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து மருந்துகடைக்கு சென்ற அவர், உரிமையாளரிடம் இதை தெரிவித்தபோது இது எங்களின் தவறு இல்லை என்றும் மாத்திரை தயாரித்த நிறுவனத்தில்தான் இந்த தவறு நடந்திருக்கக் கூடும் என கூறினார்.

பல் வலி மாத்திரையில் இருந்த கம்பி

மேலும், இதை தாங்கள் சிட்டி பார்மா என்ற இடத்தில் இருந்து பெறுவதாகவும் இந்த மாதிரியான புகாரை மருத்துவ ஆய்வாளர் அவர்களிடம் தெரியப்படுத்துவதாகவும் கூறினார். இருப்பினும் வாடிக்கையாளரும் அந்த நிறுவனத்தின் மீது ஒரு புகார் தெரிவிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மருந்தை வாங்கிய வாடிக்கையாளரின் அண்ணன், பொதுமக்கள் மாத்திரையை சாப்பிடும் முன் அதை உடைத்து சாப்பிடும்படி கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க :தடைசெய்யப்பட்ட மாத்திரை அரசு மருத்துவமனையில் விநியோகம்! அதிர்ச்சிகர தகவல்

ABOUT THE AUTHOR

...view details