12ஆவது ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், ரசிகர்களுக்காக ஃபேன் பார்க் மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் இறுதி லீக் ஆட்டங்களை கோவை ரசிகர்கள் கண்டுகளிப்பதற்காக கொடிசியா மைதானத்தில் ஃபேன் பார்க் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஐபிஎல் போட்டிகளை ராட்சத திரையில் கண்டுகளிக்க கோவை மக்களுக்கு சிறந்த வாய்ப்பு! - 12ஆவது ஐபிஎல்
கோவை: 12ஆவது ஐபிஎல் தொடரின் இறுதி லீக் போட்டிகள் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், அதனை ரசிகர்கள் ராட்சத திரையில் கண்டுகளிப்பதற்கான ஃபேன் பார்க் கோவையில் அமைக்கப்படவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய பிசிசிஐ ஃபேன் பார்க் ஒருங்கிணைப்பாளர் இர்பான் தாதன், ஃபேன் பார்க்கில் மாலை 4 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் ஆட்டத்தினை 8000 பேர் பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஐபிஎல் தொடருக்கு மக்களிடையே கிடைத்த மிகப்பெரிய வரவேற்பையடுத்து பிசிசிஐ-ன் ஃபேன் பார்க் தமிழ்நாட்டில் திருநெல்வேலி, மதுரை ஆகிய இடங்களில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. கோவையில் ஃபேன் பார்க் மைதானங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.