தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் தொடங்கிய விசாரணை திறன் மேம்பாட்டு பயிற்சி! - இளம் காவல் உதவி ஆய்வாளர்கள்

கோவை: இளம் காவல் உதவி ஆய்வாளர்களுக்கான விசாரணை திறன் மேம்பாட்டு பயிற்சியை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா தொடங்கி வைத்தார்.

கோவையில் தொடங்கிய விசாரணை திறன் மேம்பாட்டு பயிற்சி!
கோவையில் தொடங்கிய விசாரணை திறன் மேம்பாட்டு பயிற்சி!

By

Published : Nov 17, 2020, 2:52 AM IST

கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் இளம் காவல் உதவி ஆய்வாளர்களின் விசாரணை திறனை மேம்படுத்துவதற்கான "விசாரணை திறன் மேம்பாட்டு பயிற்சி" தொடங்கியது. இதனை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா தொடங்கிவைத்தார். காணொலி மூலம் நடைபெறும் இந்த பயிற்சி இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு நடைபெறுகிறது.

கோவை சரகத்திற்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் உள்ள 40 உதவி ஆய்வாளார்கள் பயிற்சி பெறுகின்றனர். இதில் விசாரணை திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு, காலையில் யோகா, உடற்பயிற்சி, மாலையில் விளையாட்டு என ஒரு மாத காலத்திற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் நரேந்திரன் நாயர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு ஆகியோர் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details