தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருந்து வழங்கும் நிறுவனங்களுக்கு CM இல்லத்திலிருந்து மிரட்டல் - வானதி சீனிவாசன் - சட்டமன்ற உறுப்பினர்

அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில்லை எனவும்; இருக்கும் மருந்துகளை மட்டுமே எழுதி கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது என்றும், அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து வழங்கும் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் இல்லத்தில் உள்ள ஒருவர் மிரட்டல் விடுப்பதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து வழங்கும் நிறுவனங்களுக்கு முதல்வர் இல்லத்திலிருந்து மிரட்டல்
அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து வழங்கும் நிறுவனங்களுக்கு முதல்வர் இல்லத்திலிருந்து மிரட்டல்

By

Published : Dec 28, 2022, 5:21 PM IST

மருந்து வழங்கும் நிறுவனங்களுக்கு CM இல்லத்திலிருந்து மிரட்டல் - வானதி சீனிவாசன்

கோவை:சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 66ஆவது வார்டு ராமநாதபுரம் கருப்பராயன் கோவில் வீதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.16.90 லட்சம் மதிப்பிலான கழிவு நீரேற்று நிலையத்தை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், ”இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக கழிவு நீரை அகற்றுவதில் மிகப்பெரிய சிரமங்கள் இருந்தது. இதனால் மக்களுக்கு சுகாதாரச் சீர்கேடு, உடல்நலப் பாதிப்பு ஆகியவை அதிகமாக இருந்தது. இதனை சரி செய்து தருவதாக தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் தெரிவித்தோம்.

அதன்படி இன்று கழிவு நீரை அகற்றுவதற்கான பம்பிங் ஸ்டேஷன் (கழிவு நீரேற்று நிலையம்) இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டி உள்ளது.

பட்டா வசதியும் ஏற்படுத்தித் தர வேண்டி உள்ளது. பட்டா வசதி ஏற்படுத்தி தருகின்ற இடத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி தர மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி வருகிறேன்’ எனத் தெரிவித்தார்.

மேலும் அவர், 'கடந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தன. செய்கின்ற விஷயத்தை ஊழல் இல்லாமல் நேர்மையாக செய்யுங்கள் என்று தான் நாங்கள் கூறுகிறோம். அப்படி பார்த்தால் சாலைகள் குறித்து பல்வேறு புகார்களை முன் வைத்தால் வெறும் குழிகளை மட்டும் அடைத்து விட்டுப் போய்விடுகிறார்கள். அது ஒரு மழை பெய்தால் போய்விடுகிறது. இதை சுட்டிக்காட்டினால் அதை மாற்றுவதில்லை.

மேலும் தமிழகத்தில் மருந்து விநியோகம் செய்வதில் மிகப்பெரிய பிரச்னை உள்ளது. மக்களுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் மருந்துகள் கிடைப்பதில்லை. மேலும் அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை விநியோகம் செய்யும் நிறுவனத்தார்களை முதலமைச்சரின் இல்லத்தில் இருக்கும் ஒருவர் அழைத்து தங்களுக்கு கமிஷன் கொடுத்தால்தான் மருந்துகளை விநியோகம் செய்ய முடியும்’ என பேசுவதாக விமர்சித்தார்.

மேலும் மருத்துவர்களுக்கு தாங்கள் கூறும் மருந்துகளைத் தான் எழுதித் தர வேண்டும் என மறைமுகமாக மிரட்டல் விடும் அரசாக இந்த அரசு உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இது போன்ற தவறுகளை சுட்டிக்காட்டினால் அதனை சரி செய்ய வேண்டிய அரசு அந்தத் திட்டத்தையே இல்லாமல் ஆக்குவதாகவும், ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடைபெறுவதாகவும் அப்படி என்றால் ஒவ்வொரு துறையிலும் வழங்க வேண்டிய உதவிகளுக்கு பதில் பணமாக கொடுத்து விடுவீர்களா என கேள்வி எழுப்பினார், வானதி சீனிவாசன்.

மேலும் முதலமைச்சர் ஒவ்வொரு துறையிலும் இருக்கின்ற குடும்ப ஆதிக்க சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பொதுவாக வீடுகளில் தான் பாகம் பிரிப்பார்கள் எனத் தெரிவித்த அவர் இங்கு மாநிலத்தின் முதலமைச்சரின் குடும்பத்தில் மகனுக்கும் மருமகனுக்கும் துறைகளை பிரித்து வருவதாக கூறினார்.

மேலும் தற்பொழுது மீண்டும் பரவத் துவங்கியுள்ள கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும்; இது குறித்து மாநில சுகாதாரத்துறையிடம் கோரிக்கை கொடுக்கிறோம் என தெரிவித்த அவர் இது குறித்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், அரசாங்கமும் பல்வேறு இடங்களில் முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: மின்சார எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம்?

ABOUT THE AUTHOR

...view details