தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கோவையில் போராட்டம்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் கோவையில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் நிரூப் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கோவை ரயில் நிலையத்தில் ரயில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கோவையில் போராட்டம்
அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கோவையில் போராட்டம்

By

Published : Jun 22, 2022, 6:14 PM IST

கோவை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'அக்னிபத்' திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் கோவையில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் நிரூப் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கோவை ரயில் நிலையத்தில் ரயில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது இத்திட்டத்திற்கு எதிராகவும் மத்திய அரசிற்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

காவல் துறையினர் கேட்டும் அவர்கள் ரயில் முன்பிருந்து கலைந்து செல்லாததால் காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அவர்களை இழுத்துச்சென்றனர். அப்போது காவல் துறையினருக்கும் போராட்டம் நடத்துபவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது.

அதனைத்தொடர்ந்து காவல் துறையினர் அவர்களை வேறு வழியில் கைது செய்து அழைத்துச்செல்ல முயன்ற நிலையில், ’ரயில் நிலையத்தின் முன் நுழைவுவாயில் வழியாக இந்திய மாணவர் சங்கத்தினர் வருவோம்’ எனக் கூறி முழக்கங்களை எழுப்பியபடி ரயில் நிலையத்திற்குள் நுழைந்து வெளியேறினர்.

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் கோவையில் போராட்டம்

அதனைத்தொடர்ந்து ரயில் நிலையம் முன்பு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களைக் கைது செய்து அழைத்துச்சென்றனர். இதனால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: கோவையில் 10, 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய சிறைக்கைதிகள் 'ஆல்பாஸ்'

ABOUT THE AUTHOR

...view details