உலகம் முழுவதும் மனித குலத்தையே அச்சுறுத்தி வரும் கரானோ வைரஸ் தொற்று பரவல் இந்தியாவில் அதிகரித்துவருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவை ஆரம்ப நாட்களில் பொதுமக்கள் முறையாக கடைபிடித்து வந்த நிலையில், தங்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களை வாங்க, அன்றாடம் அவர்கள் படிப்படியாக வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் நடமாடி வாகனங்களில் சென்றுவருகின்றனர்.
இதன் காரணமாக கரானோ வைரஸ் தொற்று பரவுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும், இதையடுத்து பொதுமக்கள் நலன் கருதி வருவாய் துறை சார்பாக காந்தி வாரச்சந்தை, உழவர் சந்தை பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பான் சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று அந்த சுரங்கத்தை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு சட்டபேரவை துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் திறந்து வைத்தார்.
இதையும் படிங்க...காணொலி மூலம் வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி