கோயம்புத்தூர் மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. அதன் பின்புறம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் நேற்று தொடக்க பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஆறாம் வகுப்பு படிக்கும் விக்னேஷ் என்ற மாணவனின் காலில் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவனை மீட்ட ஆசிரியர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கல்வித்துறை அலுவலர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, அரையாண்டு தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் மேல்நிலைப்பள்ளி படிக்கும் மாணவன் தொடக்கப் பள்ளியின் சுற்றுச்சுவர் மீது ஏறி வெளியே செல்ல முயன்றுள்ளான். அப்போது அந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், மாணவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்றனர்.