கோயம்புத்தூர் டவுன்ஹால் ராஜவீதியில் பைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் மேல்தளத்தில் உள்ள குடோனில் துணிப் பைகள், தோள்ப்பட்டை பைகள் என பல விதமான பைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று காலை மின்கசிவு காரணமாக, குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறைக்கும், காவல் துறைக்கும் தகவல் அளித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப்பின் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் ஆயிரக்கணக்கான பைகள் எரிந்து சேதமானது. மேலும், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால் கீழ் பகுதிக்கு தீபரவாமல் தடுக்கப்பட்டு, பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கோவை டவுன்ஹால் கடையில் தீ விபத்து! இந்த விபத்து குறித்து வெரைட்டி ஹால் ரோடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க...தந்திரங்கள் சூழ்ந்த சமகால அரசியல்!