தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிப்பதற்கு மனைவி பணம் தராததால் கணவன் தற்கொலை! - தமிழ் குற்ற செய்திகள்

கோவை: குறிச்சி குளம் அருகே குடிப்பதற்கு மனைவி பணம் தராததால், குளத்திலிறங்கி கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Husband commits suicide as wife refuses to drink
Husband commits suicide as wife refuses to drink

By

Published : Jul 7, 2020, 10:37 PM IST

கோவை எல்ஐசி காலனி பகுதியை சேர்ந்தவர்கள் நம்பிராஜன் - செல்வி தம்பதியர். இவர்கள் இருவரும் குறிச்சி குளத்தில் நம்பிராஜன் அம்மாவிற்கு திதி கொடுப்பதற்காக இன்று மாலை வந்துள்ளனர். திதி கொடுத்து முடித்த பிறகு நம்பிராஜன் அவர் மனைவியிடம் குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார்.

ஆனால் பணம் தர மறுத்து செல்வி, கோபத்துடன் ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். அதனைத் தொடர்ந்து நம்பிராஜன் அவரது செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை கரையிலேயே வைத்து விட்டு குளத்தில் இறங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் வெகுநேரம் போராடி, இறந்த நிலையில் நம்பிராஜனின் உடலை மீட்டனர். அதன்பின் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கொத்தனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிப்பதற்கு மனைவி பணம் தராததால் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details