தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே கயிற்றில் கணவன், மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை!

கோவை: கருமத்தம்பட்டி அருகே ஒரே கயிற்றில் கணவனும் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

suicide

By

Published : Oct 30, 2019, 7:40 PM IST

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகில் உள்ள பொண்ணாண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் கேசவராஜ். இவரது மனைவி கிருத்திகா. இருவருக்கும் திருமணமாகி ஓராண்டு ஆகிறது. இந்நிலையில் இன்று காலை 9 மணி ஆகியும் கேசவராஜ், கிருத்திகாவின் அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ஜன்னலை திறந்து பார்த்தனர்.

அப்போது, கேசவராஜ் கிருத்திகா இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடம் சென்ற காவல்துறையினர், இருவரின் உடலை கைபற்றி உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே கயிற்றில் கணவனும் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை

இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மைதானத்தில் ஆண் சடலம் - திருவள்ளூரில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details