பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தமிழனை ஆதரித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், உடுமலைப்பேட்டையில் இன்று மாலை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது, முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
அதிமுக உருவாக்கியுள்ளது மகா கூட்டணி அல்ல; அது துரோகக் கூட்டணி என்று சாடிய அவர், மத்தியில் எந்த ஆட்சி அமைய வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
மத்தியில் யாரும் தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெறப் போவதில்லை அதுவும் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கப் போவதில்லை என்றும் தினகரன் பேசினார்.
மேலும், கேரளாவில் காங்கிரஸுக்கு எதிராக கம்யூனிஸ்ட் களமிறங்கியிருக்கிறது; இவர்களுக்குள்ளே ஒன்றுமையில்லாதபோது, இவர்கள் எப்படி நாட்டை ஒழுங்காக நடத்தப் போகிறார்கள்? என்றும் டிடிவி தினகரன் கேள்வியெழுப்பினார்.
உடுமைப்பேட்டை பரப்புரையின்போது அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்