தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் கருத்து கேட்பு கூட்டம் : வீட்டு வசதி நல வாரிய அமைச்சர் பங்கேற்பு

கோவையில்,இன்று(டிச 19) சிங்காநல்லூர் ஹவுஸிங் யூனிட்டில் அமையவுள்ள புதிய அடுக்குமாடி வீடு தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.இதில் வீட்டு வசதி நல வாரிய அமைச்சர் பங்கேற்றார்.

கோவையில் மக்களிடம் கருத்து கேக்கும் கூட்டம் : வீட்டு வசதி நல வாரிய அமைச்சர் பங்கேற்பு
கோவையில் மக்களிடம் கருத்து கேக்கும் கூட்டம் : வீட்டு வசதி நல வாரிய அமைச்சர் பங்கேற்பு

By

Published : Dec 20, 2021, 8:08 AM IST

கோவை:இன்று(டிச 19) வீட்டு வசதி வாரிய நலத்துறை அமைச்சர் முத்துசாமி ,சிங்காநல்லூர் ஹவுஸிங் யூனிட்டில் அமையவுள்ள புதிய அடுக்குமாடி வீடு தொடர்பாக கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.

புதிய வீடுகள்

இதைத்தொடர்ந்து பேட்டியின் போது பேசிய அவர் "சிங்கநல்லூர் குடிசை மாற்று வாரிய பகுதியில் 960 வீடுகள் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது. தற்போது மோசமான நிலைமையில் உள்ளது .

எனவே இங்கு கட்டப்பட்டு உள்ள வீடுகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.இங்கு மேற்கொள்ளப்படும் பணிகளை கவனிக்க குடியிருப்பு வளாகத்தில் உள்ள நபர்களில் 22 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

கோவையில் கருத்து கேட்பு கூட்டம் : வீட்டு வசதி நல வாரிய அமைச்சர் பங்கேற்பு

வீடுகள் கட்ட திட்டம்

தற்பொழுது இங்கு புதியதாக கட்டப்படும் கட்டடங்கள் மிகவும் தரமானதாக இருக்கும் .அனைத்து விதமான அடிப்படை வசதிகள் மற்றும் பொதுவான வசதிகள் என அனைத்தும் ஏற்படுத்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 400 சதுர அடி, 600 சதுர அடி, 800 சதுர அடி என தனித்தனியான வீடுகளில் தற்போது உள்ளனர்.

இவர்களுக்கு ஒரே இடத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் பட்சத்தில் கூடுதலாக சதுர அடிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். ஏற்கனவே கட்டப்பட்டு உள்ள கட்டடங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதேபோல் தற்போது குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்படும் வீடுகள் அனைத்தும் உறுதியாக தரமானதாக இருக்கும்.

சிங்காநல்லூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள பொதுமக்கள் வேறு பகுதிகளுக்கு வாடகைக்கு சென்றால் அவர்களுடைய வாடகையை குடிசை மாற்று வாரியம் ஏற்றுக்கொள்ளும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:Cheating case against PT Usha: பி.டி.உஷா மீது மோசடி வழக்கு

ABOUT THE AUTHOR

...view details