தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூறைக்காற்றுடன் மழை... மின்கம்பங்கள் விழுந்து குடியிருப்புகள் சேதம்..! - Rain at pollachi

பொள்ளாச்சியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் உயர் அழுத்த மின் கம்பங்கள் குடியிருப்புகள் மீது சாய்ந்து விழுந்துள்ளன.

சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மின்கம்பங்கள் விழுந்து குடியிருப்புகள் சேதம்..!
சூறைக்காற்றுடன் பெய்த மழையால் மின்கம்பங்கள் விழுந்து குடியிருப்புகள் சேதம்..!

By

Published : Apr 30, 2022, 10:29 PM IST

கோயம்புத்தூர்:பொள்ளாச்சி - கோவை சாலை சிடிசி மேடு அண்ணா காலனியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு அருகில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கு அங்கேயே தகர கொட்டகை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் நேற்று (ஏப்.29) நள்ளிரவு பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த தகர கொட்டகை பெயர்ந்து அருகில் இருந்த உயர் அழுத்த மின் கம்பத்தின் மீது விழுந்தது. மின் கம்பம் அடியோடு சாய்ந்து எதிரே இருந்த குடியிருப்புகள் மீது விழுந்தது. இதனியை மின்வெட்டு ஏற்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “குடியிருப்புகளுக்கு மத்தியில் உயர் மின்னழுத்த கம்பங்கள் இருக்கின்றன. ஐந்து ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்த மின்கம்பங்கள் பழுது பார்க்கப்பட வேண்டும். இதுவரை ஒரு முறை கூட பழுது பார்க்கப்படவில்லை. கம்பத்திற்கு அடியில் துருப்பு படிந்து சேதம் அடைந்திருந்தது. இதுகுறித்து மின்வாரிய அலுவலர்களிடம் பலமுறை தகவல் கொடுத்தும் வரவில்லை. அதனால்தான் இந்த விபத்து நேர்ந்தது” என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மனைவி இறந்ததாக சமூக வலைதளங்களில் கண்ணீர் அஞ்சலி புகைப்படம் வெளியிட்ட கணவர்

ABOUT THE AUTHOR

...view details