கோவை மாவட்டம், வெள்ளலூர் பகுதியில் உள்ள ஹவுசிங் யூனிட்டில் வசித்து வருபவர் சபானா (20). இவருக்கு நேற்று (ஜூன்.10) பிரசவ வலி வந்த நிலையில், 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, உடனடியாக அங்கு விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், சபானாவை ஹவுசிங் யூனிட் மேல் தளத்திலிருந்து ஆம்புலன்சில் கொண்டு வந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அதிக வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்க்கும் சூழல் ஏற்பட்டது. அவசரத்தை உணர்ந்து ஆம்புலன்சில் இருக்கும் மருத்துவர், உதவியாளர் இருவரும் சேர்ந்து பிரசவம் பார்த்துள்ளனர். அதில், அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது.