தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவமனையா? அல்லது நோய்களின் பிறப்பிடமா? காணொளி வைரல்! - கோயம்புத்தூர் அண்மைச் செய்திகள்

கோயம்புத்தூர்: அரசு மருத்துவமனையில் செயல்படும் கரோனா பகுதி சுகாதாரமற்ற முறையில் பராமரிக்கப்படுவது தொடர்பாக வெளியாகிய காணொளி வைரலாகி வருகிறது. இது மருத்துவமனையா? அல்லது நோய்களின் பிறப்பிடமா? என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

கோவை மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீர்கேடு குறித்து வைரலாகும் காணொலி.
கோவை மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீர்கேடு குறித்து வைரலாகும் காணொலி.

By

Published : May 20, 2021, 7:27 AM IST

கோயம்புத்தூரில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கரோனா நோயாளிகள் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால், அவ்வாறு செயல்படக் கூடிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் சுகாதாரமற்ற முறையில் செயல்படுவதாக ஏற்கனவே பலர் குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் செயல்படும் கரோனா வார்டில் நோயாளிகளின் படுக்கைகள், கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பது குறித்த காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

கோவை மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீர்கேடு குறித்து வைரலாகும் காணொளி!

அந்த காணொலியில் மருத்துவக் கழிவுகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது. இந்தக் காணொளியை சமூக வலைதளங்களில் கண்ட நெட்டிசன்கள் பலர், இது மருத்துவமனையா? அல்லது நோய்களின் பிறப்பிடமா? என கேள்வியெழுப்பி வருகின்றனர். இது குறித்து உடனடியாக சுகாதாரத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : பேரறிவாளனுக்கு 30 நாள்கள் சாதாரண சிறை விடுப்பு

ABOUT THE AUTHOR

...view details