தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆணவக்கொலை: காதலனைத் தொடர்ந்து, காதலியும் பலி..! - honor killing

கோவை: மேட்டுப்பாளையம் அருகே காதல் ஜோடி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் காதலன் உயிரிழந்ததையடுத்து, படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த காதலியும் பரிதாபமாக உயிரிழந்தார்.

மாணவி

By

Published : Jun 29, 2019, 8:13 AM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீ ரங்கராயன் ஓடையைச் சேர்ந்த கருப்புசாமியின் மகன் கனகராஜ் (22). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த தர்ஷினி பிரியாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இதில் கனகராஜ் உயர் சமூகம் என சொல்லப்படக்கூடிய ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், தர்ஷினி பிரியா தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இதனால் இருவரின் காதலுக்கு கனகராஜின் சகோதரர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

ஆனால், இதுகுறித்து கவலையின்றி இருவரும் காதலை தொடர்ந்து வந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி சிறுமுகை அடுத்த வெள்ளிபாளையம் பகுதியில் காதலர்கள் இருவரும் தனியாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு அரிவாளுடன் வந்த கனகராஜின் சகோதரர் வினோத், இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மாணவி தர்ஷினி பிரியா படுகாயமடைந்தார்.

காதலன் கனகராஜ்

பின்னர் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மாணவியை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு அனுப்பி வந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வந்த மாணவி நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கின் குற்றவாளியான வினோத் ஏற்கனவே சரணடைந்தையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details