தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீடுகளை இழந்து நடுக்காட்டில் தவிக்கும் சர்க்கார்பதி மலைவாழ் மக்கள்...! - வீடுகளை இழந்து தவிக்கும் சர்க்கார்பதி மலைவாழ் மக்கள்

கோவை: பொள்ளாச்சி அருகே வீடுகளை இழந்து நடுக்காட்டில் ஆதரவின்றி தவிக்கும் சர்க்கார்பதி மலைவாழ் மக்கள், தங்களுக்கு உதவ அரசு முன்வருமா என ஏக்கத்துடன் தவித்துவருகின்றனர்.

வாரிச் சூருட்டிய நிலையில் சர்க்கார்பதி கிராமம்

By

Published : Oct 2, 2019, 2:45 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்துவருகிறது. இதனால் மலைப்பகுதியில் உள்ள அருவி, காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தக் காட்டாற்று வெள்ளம் செடி, கொடிகளை வாரி எடுத்துச் சென்றது மட்டுமல்லாமல், மலைவாழ் மக்களின் 22 வீடுகளையும் சுருட்டி எடுத்துச் சென்றுள்ளது.

சிறுமி மரணம்! - சோகமே உருவான கிராமம்

மலைவாழ் கிராமமான சர்க்கார்பதியில் சுமார் 22 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்நிலையில், அங்கு ஏற்பட்ட வெள்ளத்தால் விக்னேஷ், சுந்தரி என்ற இரு சிறுவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், விக்னேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் சுந்தரி ஐந்து நாட்களுக்கு பிறகு சடலமாகவும் மீட்கப்பட்டனர்.

சிதிலமடைந்து கிடக்கும் வீடுகள்

பாதுகாப்பு என்ற பெயரில் பாதுகாப்பற்ற தங்கும் இடம்

இந்தச் சோகம் ஒருபுறமிருக்க வீடு, உடமைகள் இழந்து நிர்கதியாக உள்ள மக்களுக்கு பாதுகாப்பு என்ற பெயரில் அரசு அலுவலர்கள் மின்வாரிய அலுவலகத்தில் தங்க இடம் ஒதுக்கியுள்ளனர். அந்த அலுவலகம் இன்றோ, நாளையோ இடிந்துவிழும் நிலையில் உள்ளதால், உயிருக்குப் பயந்தே மலைவாழ் மக்கள் தங்கியுள்ளனர்.

இந்நிலையிலும் அவர்கள் கேட்பது காசு, பணம் இல்லை; தங்குவதற்கு நிரந்த வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே. இதையறிந்த வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டுச் சென்றார். போனவர் போனவர்தான் திரும்ப வரவேயில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

உதவி செய்யும் தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள்

ஈரமனதுடன் நேசக்கரம் நீட்டிய'உதவும் இதயங்கள்'தொண்டு நிறுவனம்

அரசின் நிலை இப்படியிருக்க வேதனையுடன் இருக்கும் மக்களுக்கு 'உதவும் இதயங்கள்' என்ற தனியார் தொண்டுநிறுவனம் அனைத்து குடும்பத்திற்கும் தேவையான உடைகள், அரிசி, சமையல் பாத்திரங்கள், பள்ளி குழந்தைகளுக்கான நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவைகளை கொடுத்துள்ளன.

வாரிச் சுருட்டிய நிலையில் சர்க்கார்பதி கிராமம்

இது குறித்து கோவை மாவட்ட மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் பரமசிவம் கூறுகையில், "பக்கத்தில் உள்ள கேரள மாநிலத்தில் மலைவாழ் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எல்லாமே செய்து தருகின்றார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆறு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பாதுகாப்பான கான்கிரீட் வீடுகளை அம்மாநில அரசு கட்டிக் கொடுத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் மின்சாரம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடுஅரசோ இதில் ஒன்றுகூட செய்து தரவில்லை" என வேதனை தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details