தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்து முன்னணி முன்னாள் பிரமுகரை மிரட்டியவர் கைது! - இளைஞர்களை கத்தியுடன் மிரட்டிய இந்து முன்னணி நிர்வாகி கைது

கோவை: இந்து முன்னணியின் முன்னாள் பிரமுகரை மிரட்டிய சக அமைப்பை சேர்ந்தவரை காவலர்கள் கைது செய்தனர். அவர் கையில் கத்தியுடன் தோன்றும் காணொலிக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

இளைஞர்களை கத்தியுடன் மிரட்டிய இந்து முன்னணி நிர்வாகி
இளைஞர்களை கத்தியுடன் மிரட்டிய இந்து முன்னணி நிர்வாகி

By

Published : Jun 16, 2020, 10:38 AM IST

Updated : Jun 16, 2020, 10:57 AM IST

கோவை துடியலூரை அடுத்த தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் மதன். இவர், ஆரம்பக் காலத்தில் இந்து முன்னணி அமைப்பில் இணைந்து செயல்பட்டுவந்துள்ளார்.

அதன்பின்னர் அதிலிருந்து விலகி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பில் இணைந்தார். இந்நிலையில் இந்து முன்னணியில் உறுப்பினராக இருக்கும் சக்தி என்பவர் அடிக்கடி மதனையும் அவரது நண்பர்களையும் மிரட்டி வந்ததாக கூறப்படுகின்றது.

இதற்கிடையில் கடந்த 7ஆம் தேதி, ஜோதி புரம் பகுதியில் சக்தி மற்றும் அவரது நண்பர்கள் கையில் கத்தியுடன் மதன் மற்றும் அவரது நண்பர்களை மிரட்டியுள்ளனர்.

அதன் பின்னர் தென்னம்பாளையம் பகுதியிலும் மதனை மிரட்டியதாக தெரிகிறது.

இது குறித்து மதன் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் சக்தி கத்தியுடன் மிரட்டும் காணொலியையும் வெளியிட்டார்.

இந்து முன்னணி முன்னாள் பிரமுகரை மிரட்டியவர் கைது!

இந்தப் புகாரின் அடிப்படையில், சக்தி உள்பட நான்கு பேர் மீது காவலர்கள் கொலை மிரட்டல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சக்தியை கைதுசெய்து அவரை சிறையில் அடைத்தனர்.

காவலர்களின் கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாக உள்ள மற்ற மூன்று பேரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க...தென்காசியில் பள்ளிவாசல் உண்டியலை உடைத்து திருட்டு: இருவர் கைது!

Last Updated : Jun 16, 2020, 10:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details