கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலையில் உள்ள சுள்ளிமேட்டு பதி, பாறைபதி பகுதிகளில் 50க்கு மேற்பட்ட மழைவாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் பாறைபதியிலிருந்து ஆனைமலை மற்றும் பிற பகுதிகளுக்கு மூன்று கிலோமீட்டர் நடந்து வர வேண்டியுள்ளது.
சாலை வசதிக்கோரி சார் ஆட்சியரிடம் மனு! - கோவை
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள சுள்ளிமேடு பகுதி மழைவாழ் மக்கள் சாலை வசதிக்கோரி சார் - ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
சாலை வசதி வேண்டி சார் ஆட்சியரிடம் மனு
இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மிகவும் சிரமப படுகின்றனர். அதனால் பாறைபதி பகுதிக்கு சாலை வசதியும், பேருந்து வசதியும் செய்து கொடுக்கும்படி, அப்பகுதி மக்கள் சார்–ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Last Updated : May 17, 2019, 2:29 PM IST