கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் குற்றவாளிகளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக்க கோரி மாணவிகள் மனு - துப்பாக்கி வைத்துக்கொள்ள மனு
கோவை :பொள்ளாச்சி விவகாரத்தைத் தொடர்ந்து தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக்க கோரி இளம் பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் .
துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி
இந்நிலையில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள், பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்ட பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதையடுத்து கல்லூரி மாணவிகள் இருவர் தற்காப்புக்காக மாணவிகள் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.