கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கான நேர்காணல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணல் நாளையுடன் முடிவடைகிறது.
இந்த துப்புரவாளர் பணிக்கு படிக்காதவர்கள் மற்றும் வயதானவர்கள் விண்ணப்பிப்பது வழக்கம். ஆனால் இம்முறை வழக்கத்திற்கு மாறாக படித்த பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளது அதிர்ச்சியையும் வேலை இல்லா திண்டாட்டத்தையும் காட்டும் விதமாக அமைந்துள்ளது.
விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் இந்த நேர்காணலுக்கு 20 மேசைகள் அமைக்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மூலம் நேர்காணலுக்கு வந்தவர்களின் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.
துப்புரவு பணியாளர் நேர்காணல் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பட்டதாரி பெண் நந்தினி, ‘இந்த வேலைக்கு படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைத்து தரப்பினரும் வந்துள்ளனர். இந்த வேலைக்கு 8ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் என்பதால் அனைவரும் விண்ணப்பித்துள்ளனர்’ என்று கூறினார். மேலும், படித்தவர்களுக்கு அவர்களின் படிப்பிற்கு தகுந்த வேலை அளிப்பதாகக் கூறியுள்ளதால் படித்தவர்களும் விண்ணப்பித்துள்ளதாகக் கூறினார்.
இதையும் படிங்க: துப்புரவுத் தொழிலாளர் எரித்து கொலை! தாய் மகனுக்கு ஆயுள்!