தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துணிக்கடையில் துணிகளை திருடும் கும்பல் சிக்கியது! - கோயம்புத்தூர் செய்திகள்

கோயம்புத்தூர்: ராமநாதபுரப் பகுதியிலுள்ள, துணிக்கடையில் துணிகளை திருடும் கும்பல் சிக்கியது.

திருட்டு
ராமநாதபுரப் பகுதியிலுள்ள, துணிக்கடையில் துணைகளை திருடும் கும்பல் சிக்கியது

By

Published : Mar 1, 2021, 1:04 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் ராமநாதபுரப் பகுதியிலுள்ள தனியார் துணிக்கடையில், விலையுயர்ந்த சேலைகள் திருட்டு போனது குறித்து, கடை நிர்வாகம் சார்பில் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து காவல் துறையினர் அக்கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது இத்திருட்டில், தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்த முருகன், மாணிக்கவாசகம், தனலட்சுமி ஆகிய மூவர் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

துணிக்கடையில் துணிகளை திருடும் கும்பல் சிக்கியது

இதைத் தொடர்ந்து அந்த மூவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மேலும் 2 பெண்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். தற்போது அந்தத் தனியார் துணிக்கடையில் சேலைகளை திருடும் சிசிடிவி காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இச்சம்பவத்தில் கைதானவர்கள் ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களிலுள்ள கடைகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

ABOUT THE AUTHOR

...view details