தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிமன்றத்தில் ஆஜராகி வீடு திரும்பிய நபர்களை ஓட ஓட வெட்டிய மர்ம கும்பல் - பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்! - Coimbatore Gang Attack

Coimbatore Gang Attack: பெண் வன்கொடுமை வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் மீதான விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகி வீடு திரும்பிய நபர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜராகி வீடு திரும்பிய நபர்களை ஓட ஓட வெட்டிய மர்ம கும்பல்
நீதிமன்றத்தில் ஆஜராகி வீடு திரும்பிய நபர்களை ஓட ஓட வெட்டிய மர்ம கும்பல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 1:08 PM IST

நீதிமன்றத்தில் ஆஜராகி வீடு திரும்பிய நபர்களை ஓட ஓட வெட்டிய மர்ம கும்பல்

கோயம்புத்தூர்: கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பெண் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளான ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், சைமன் மற்றும் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரித்திஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

அந்த வழக்கின் விசாரணை தற்போது கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று காலை (செப்.12) நீதிமன்றத்தில் ஆஜராகிய மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளனர். இதனிடையே மூவரையும் நீதிமன்ற வளாகத்தில் இருந்து சிலர் பின் தொடர்ந்து வந்ததாகத் தெரிகிறது.

அதைத் தொடர்ந்து, தங்களை பின் தொடர்வதை அறிந்த அந்த மூவரும் அங்கிருந்து அவிநாசி சாலை மேம்பாலம் வழியாக காட்டூர் பகுதிக்குள் நுழைந்து தப்ப முயற்சி செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களை மூன்று இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து வந்த 9 மர்ம நபர்கள், ராம்நகர் ராமர்கோவில் சாலையில் வைத்து ஏற்கனவே தாங்கள் மறைத்து கொண்டு வந்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதையடுத்து உயிருக்கு பயந்து வாகனத்தில் இருந்து இறங்கிய ரஞ்சித் மற்றும் சைமன் இருவரும் ஓட துவங்கவே, இருவரையும் விரட்டி வெட்டிய அந்த மர்ம கும்பல், அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடினர். அதையடுத்து சம்பவம் குறித்து அங்கிருந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அங்கு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் அடையாளம் கண்டறிந்துள்ளனர். அதில் கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவரும், ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்பு உடையவருமான ரவி என்பவர் தலைமையில் இந்த கும்பல் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து சம்பவம் குறித்து காட்டூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே கொலை முயற்சி சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே மோதல்; கூர்மையான ஆயுதங்களால் தாக்கும் வீடியோ வைரல்!

ABOUT THE AUTHOR

...view details