தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இதைத்தொடர்ந்து, கரோனா தொற்று பாதிப்பாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், பணியாளர்கள் ஆகியோர் அணிவதற்கான கவச உடை தயாரிக்கும் பணிகளை பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
முழு கவச உடை தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்களும், செவிலியர்களும் தங்களது உயிர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில், கோயம்புத்தூரில் பிரபல கார்மெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் Healthiev என்ற பெயரில் வைரஸ் தடுப்பு உபகரணங்களை இன்று (ஜூன் 23) அறிமுகம் செய்யப்பட்டது. இதில், மருத்துவ பணியின் போது பயன்படுத்தப்படும் உடைகள், (ppe) முழு கவச உடைகள், முகக்கவசம் போன்றவை அறிமுகம் செய்யப்பட்டன.
இதன் பின்னர் அந்நிறுவன நிர்வாக இயக்குநர் ஸ்ரீராமுலு செய்தியாளர்களிடம் கூறியதாவது, "மருத்துவப் பணிகளின் போது பயன்படுத்தும் உடைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் முறைகளுக்கு மாற்றாக இந்த உடைகளை 80 முறை துவைத்து பயன்படுத்தலாம். குளோரின் கலவை கொண்டு துவைக்க வேண்டும். அதேபோன்று நூலக கவச உடைகளையும் அறிமுகம் செய்துள்ளோம்.
இவற்றை ஐந்து முறை மீண்டும், மீண்டும் துவைத்து பயன்படுத்தலாம். கரோனா சிகிச்சையளிக்க ஒரு முறை பயன்படுத்தப்படும், பிபிஇ-க்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம். இவை, வழக்கமான விலையை விட 20 விழுக்காடு முதல் 30 விழுக்காடு வரை விற்பனை செய்யப்படும். இதை சிட்ரா ஆய்வகமும் பரிசோதித்து சான்றிதழ் வழங்கியுள்ளது. புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள முகக் கவசம் 20 முறைக்கு மேல் பயன்படுத்தலாம். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது குறையும்" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சிறையில் தந்தை மகன் மரணம்: தமிழ்நாடு அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்