கோவை:கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தின் பாதிரியார் கோவை குற்றப்பிரிவு போலீஸில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், "கடந்த 2005ஆம் ஆண்டு முதல் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள மண்டல சிஎஸ்ஐ ஆலய நிர்வாகத்தின் கீழ் நான் பணியாற்றி வருகிறேன். அன்றிலிருந்து வருகால வைப்பு நிதி தொகையை சிஎஸ்ஐ அலுவலகத்தில் செலுத்தி வருகிறேன்.
தற்போது வருங்கால வைப்பு கணக்கு குறித்து கேட்டபோது, அலுவலக தரப்பில் இருந்து முறையான விவரம் தரப்படவில்லை. கடந்த ஆண்டில் இருந்து மட்டுமே கணக்கு காண்பிக்கப்படுகிறது. 15 ஆண்டுகளாக வருங்கால வைப்பு தொகையை செலுத்தி வந்த நிலையில் சிஎஸ்ஐ நிர்வாகம் ஒரு ஆண்டிற்கு மட்டுமே கணக்கு காண்பித்து மோசடியில் ஈடுப்பட்டுள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.