தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேரளாவில் அதிகரிக்கும் கரோனா: எல்லையில் அமைச்சர் ஆய்வு

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து வாளையார் சோதனைச் சாவடியில் வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வுமேற்கொண்டார்.

covai
கேரளாவில் அதிகரிக்கும் கரோனா

By

Published : Aug 6, 2021, 7:37 AM IST

கோவையில் தமிழ்நாடு-கேரளா எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்படும்வரும் கரோனா தடுப்புப் பணிகளை வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வுசெய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கேரளாவில் தொற்று அதிகரித்துவருவதன் காரணமாக, கோவையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருவதால், கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எல்லையில் அமைச்சர் ஆய்வு

கரோனா நெகட்டிவ் சான்றிதழ், இரண்டு தடுப்பூசிகள் போட்டதற்கான சான்றிதழ் ஆகியவை இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இரு மாநில அரசுகளுக்கும் சேர்த்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முறையான சான்றிதழ் இல்லாமல் வரும் வாகனங்களை கேரளாவிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது" என்றார்.

வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன்

இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா விழிப்புணர்வு பரப்புரை வாகன பேரணி, தாய்ப்பால் வார விழிப்புணர்வுப் பேரணியை அமைச்சர் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். மேலும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் ஆறு பயனாளிகளுக்கு தையல் இயந்திரத்தை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:திமுக அரசுக்கு மக்களே அரண் - அமைச்சர் செந்தில் பாலாஜி

ABOUT THE AUTHOR

...view details