கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள பூ மார்க்கெட்டில், உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இங்கு மொத்தமாகவும், சில்லறையாகவும் பல்வேறு விதமான பூக்கள் விற்பனையாகி வருகின்றன. மேலும் கோவை பூ மார்க்கெட்டில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கும் அதிகளவில் பூக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
இதனிடையே கடந்த மாத தொடக்கத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், மாதத்தின் தொடக்கத்திலேயே பூக்கள் விலை கடுமையாக உயர்ந்திருந்தது. அப்போது மல்லிகைப்பூ கிலோ 4,000 ரூபாய் வரை விற்பனையானது. இந்த நிலையில் தற்போது நவராத்திரிப் பண்டிகை தொடங்கியுள்ளது.
இதனால் கடந்த இரண்டு வாரங்களாக பூக்கள் விலை குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இன்றும் நாளையும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்டப் பண்டிகைகள் வர உள்ளதால் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. அதன்படி மல்லிகை ஒரு கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனையானது.