இதுகுறித்து, கோவை மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் உபரி நீர் பில்லூர் அணைக்கு வினாடிக்கு 10,000 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டுப்பாளையத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை..! - பில்லூர் அணை
கோவை: கனமழை எதிரொலியால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரை அருகே உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை!
உபரி நீர் அதிகமாக வருவதால் பில்லூர் அணை தனது முழு கொள்ளளவையும் எட்டும் நிலையில் உள்ளதால். அணை பாதுகாப்பு கருதி வினாடிக்கு 6,000 கனஅடி வீதம் திறக்கப்படவுள்ளது.
எனவே நீரின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருந்து ஆற்றை கடக்கவோ, ஆற்றில் இறங்கவோ கூடாது எனவும் பாதுகாப்பு பகுதிக்கு செல்லுமாறும் அறிக்கையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.