தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆனைமலையில் முயல் வேட்டையாடிய ஐந்து பேர் கைது - five men arrested

கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாங்கரை வனப்பகுதியில் முள்ளம்பன்றி மற்றும் முயல் வேட்டையாடிய ஐந்து பேரை வனத் துறையினர் கைது செய்தனர்.

five men arrested for hunting

By

Published : Jul 31, 2019, 10:39 PM IST

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் அவ்வப்போது வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு வந்தன. இதனால் வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் இரவு நேர ரோந்து தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று இரவு இருசக்கர வாகனத்துடன் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மணிகண்டன், பழனிசாமி, தினகரன், காமாட்சி சுந்தரம், செல்வகுமார் ஆகியோரை வன அலுவலர்கள் சோதனையிட்டபோது அவர்களிடம் முள்ளம்பன்றி கறி மற்றும் முயல் போன்றவை இருப்பதைக் கண்டனர்

வனச்சரகர் காசிலிங்கத்தின் பேட்டி

இதனைத் தொடர்ந்து வனத் துறை அலுவலர்கள் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் மங்கரை வனப்பகுதிக்கு உட்பட்ட ஒட்ட காடு பகுதியில் இரவு நேரங்களில் பேட்டரி மூலம் ஒலி எழுப்பக் கூடிய கருவியைப் பயன்படுத்தி முயல் மற்றும் முள்ளம்பன்றி போன்றவற்றை வேட்டையாடியது தெரியவந்தது. பின் அவர்களை கைது செய்த வனத் துறையினர் அவர்கள் வைத்திருந்த இரண்டு இருசக்கர வாகனம், பேட்டரி, 5 கிலோ முள்ளம்பன்றி கறி போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் ஜே.எம் 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என வனச்சரகர் காசிலிங்கம் தெரிவித்தார்

ABOUT THE AUTHOR

...view details