சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் மாவட்ட அலுவலர் ஜெகதீசன் தலைமையில், முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஆபத்தான சூழலை கையாளுவது குறித்து ஒத்திகை நடத்திய தீயணைப்புத் துறை வீரர்கள்! - சர்வதேச பேரிடர் குறைப்பு தினம்
கோவை : இயற்கை பேரிடர் ஏற்படும் காலங்களில் அவற்றை எதிர்கொள்வது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.
ஆபத்தான சூழலை கையாள்வது குறித்து ஒத்திகை நடத்திய தீயணைப்பு துறை வீரர்கள்!
பொது மக்கள் முன்னிலையில், குறிஞ்சி குளத்தில் இந்த ஒத்திகை நடந்தது. புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற சமயங்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பதை தீயணைப்பு வீரர்கள் 30 பேர் ஒத்திகை நடத்தி விளக்கிக் காட்டினர்.
நாளை மேட்டுப்பாளையம், அன்னூர், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு துறையினர் இதுபோன்று ஒத்திகை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.