தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரும்பு குடோனில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் - several lakhs

கோயம்புத்தூரில் உள்ள இரும்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.

இரும்பு குடோனில் தீ விபத்து -  பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்
இரும்பு குடோனில் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

By

Published : Nov 27, 2022, 11:28 AM IST

கோயம்புத்தூர்: போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் உள்ள அரசு பணியாளர் குடியிருப்பு அருகே, வசீப்ராஜா என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் உள்ளது. இந்த குடோனில் நேற்று (நவ 26) நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மின் இணைப்பை துண்டித்து விட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எதிர்பாராத இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இரும்பு பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரும்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளது

இதையும் படிங்க:சாலையோரம் நின்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது!

ABOUT THE AUTHOR

...view details