தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்னநார் தொழிற்சாலையில் தீ விபத்து: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் கருகி நாசம்! - கோயம்புத்தூரில் தீ விபத்து

தனியார் தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள், தென்னை நார்கள் எரிந்து நாசமாகின.

தென்னநார் தொழிற்சாலையில் தீ விபத்து
தென்னநார் தொழிற்சாலையில் தீ விபத்து

By

Published : Jun 30, 2021, 11:08 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு அடுத்துள்ள முத்து வுண்டனூரைச் சேர்ந்தவர் கதிர்வேல்(எ)ராசு(50). அதே ஊரில் இவருக்கு செந்தமான 5 ஏக்கர் நிலத்தில் தென்னை நார் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்த தொழிற்சாலையில் இன்று (ஜூன் 30) 3 பேர் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, தென்னை நார் பிரித்தெடுக்கும் இயந்திரத்தில் திடீரென தீ பிடித்துள்ளது. அந்தத் தீ மளமளவென அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நார் மற்றும் தேங்காய் மட்டைகள் மீதும் பற்றி எரியத் தொடங்கியது.

இதனைக் கண்டு அங்கு பணியில் இருந்த 3 பேரும் உடனடியாக அங்கிருந்து வெளியேறி தொழிற்சாலையின் உரிமையாளர் கதிர்வேலுக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள், தென்னை நார் பிரித்தெடுக்கும் இயந்திரத்திற்கும் தீ பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதனைத் தொடர்ந்து கிணத்துகடவு, பொள்ளாச்சி, கோயம்புத்தூரில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

நான்கு மணி நேரமாக தொர்ந்து தீ பற்றி எரிந்ததால் அருகில் உள்ள கிணறுகளிலிருந்து, லாரி மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தொடர்ந்து தீயணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள இயந்திரங்கள், தேங்காய் மட்டைகள், தென்னை நார்கள் தீயில் கருகி நாசமாகின.

இதையும் படிங்க:வீட்டில் சிலிண்டர் வெடித்ததால் 4 பேர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details