கோயம்புத்தூர்:கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மயிலாடும்பாறை பகுதியை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்ணும், சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த 21 வயதாக பிரசாந்த் என்ற இளைஞரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து அடுத்த ஆண்டு திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (ஜூன் 5) 18 வயது இளம் பெண்ணுக்கு பிறந்தநாள் என்பதால் இரவு 12 மணியளவில், காதலர் பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் இளம்பெண்ணின் இல்லத்திற்கு பிறந்தநாளை கொண்டாடச் சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் குடிபோதையில் சென்றதாக தெரிகிறது. குடிபோதையில் அவர்கள் இளம்பெண்ணின் வீட்டின் சுவரை ஏறி குதித்து சென்றுள்ளனர்.
அப்போது சத்தம் கேட்டு வந்த இளம் பெண்ணின் தந்தை மற்றும் உறவினர் இவர்களை பார்த்துள்ளனர். இவர்கள் குடிபோதையில் பிறந்தநாளை கொண்டாட வந்ததால் இதற்கு மறுப்பு தெரிவித்து அவர்களை இங்கிருந்து செல்லும் படி கூறியுள்ளனர். ஆனால், இளைஞர்கள் திரும்பிச் செல்ல மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் வாக்குவாதம் முற்றியுள்ளது.
இதையும் படிங்க:Afghanistan Poison Attack: ஆப்கானில் பள்ளி சிறுமிகள் மீது விஷ தாக்குதல்.. 80 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!