கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு செய்தியாளருக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "திமுக அரசு பதவியேற்றவுடன் ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜன் தலைமையில் நீட் தொடர்பாக வல்லுநர்கள் அடங்கிய குழு ஆய்வுசெய்து சட்ட முன்வடிவு வழங்கியது.
இந்தச் சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் இதுவரை குடியரசுத் தலைவருக்கு அதை அனுப்பவில்லை. மூன்று மாத காலமாக அனுப்பாமல் காலதாமதம் செய்துவருகிறார். நீட் தேர்வால் பல்வேறு துன்பத்தில் மாணவர்கள் உள்ளனர். கூட்டாட்சித் தத்துவத்தை ஆளுநர் மீறி செயல்படுகிறார். ஆளுநர் சட்ட முன்வடிவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி மத்திய அரசு ஒப்புதல் பெற்றுத் தர வேண்டும்.