தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் திறத்து விடுங்கள் - கண்ணீருடன் விவசாயிகள் கோரிக்கை..! - ஆழியார் அணை

கோவை: ஆழியாறு அணையிலிருந்து  பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

விவசாயி

By

Published : Aug 3, 2019, 7:27 PM IST

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஆழியார் அணையிலிருந்து அண்டுதோறும் ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இந்த தண்ணீர் மூலம் அனைமலை பழைய ஆயக்கட்டு சுற்றுவட்டார பகுதியில் உள்ள 6 ஆயிரத்து 400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். அனால் இந்ததாண்டு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடாமல், அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில்; " இந்த ஆண்டு அணையில் போதுமான அளவு தண்ணீர் இருந்தும் பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடாமல், கேரளாவுக்கு மட்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது கண்டனத்துக்குறியது.தற்போது தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்குப் பருவ மழையில் பயிர்கள் சேதம் ஆகாமல் காப்பாற்ற முடியும். இல்லையெனில் விவசாயிகள் அனைவரும் குடும்பத்துடன் வந்து செயற்பொறியாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைவோம்" என்று வேதனையுடன் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details