தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வேளாண் துறைக்கான அம்சங்கள் அதிகமிருக்கும் பொள்ளாச்சியில் மேலும் உணவுப் பூங்கா...!'

கோவை: பொள்ளாச்சியில் இன்று இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில் உணவுப் பொருட்கள் பதப்படுத்தி சந்தைப்படுத்தும் கருத்தரங்கம் நடைபெற்றது.

விவசாயிகள், சிறு குறு தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்

By

Published : Sep 10, 2019, 2:52 PM IST

நாட்டில் விவசாயிகள், சிறு, குறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்யும் பொருட்களில் 32 விழுக்காடு சந்தைப்படுத்த முடியாமல் வீணாகிவருகிறது. சிறு, குறு தொழில்முனைவோர், விவசாயிகள்முதலீடு செய்து சிரமப்பட்டு உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் மத்திய தொழில் துறை அமைச்சகம் பல்வேறு முயற்சிகளை ஏற்படுத்திவருகிறது.

இதன் ஒருபகுதியாக பொள்ளாச்சியில் இன்று இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சார்பில் உணவுப் பொருட்களை பதப்படுத்தி சந்தைப்படுத்தும் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், விவசாயிகள், சிறு, குறு தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் கலந்துகொண்ட தொழில் துறை வல்லுநர்கள் - விவசாயிகள், சிறு, குறு தொழில்முனைவோர்கள் உற்பத்தி செய்யும், தயாரிக்கும் பொருட்களை பதப்படுத்தி மதிப்புக்கூட்டுப் பொருளாக உருவாக்கி அதை சந்தைப்படுத்துவது குறித்து எடுத்துரைத்தனர்.

மேலும் விலை இல்லாத காலங்களில் உற்பத்திப் பொருட்களை பதப்படுத்தும் முறைகளும் இந்தக் கருத்தரங்கில் எடுத்துரைக்கப்பட்டது. வேளாண் துறைக்கான அம்சங்கள் அதிகமாக இருக்கும் பொள்ளாச்சி பகுதியில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை பதப்படுத்தி சந்தைப்படுத்த, மேலும் உணவுப் பூங்கா அமைக்க வேண்டுமென கருத்தரங்கில் பங்கேற்ற தொழில்முனைவோர்கள் வலியுறுத்தினர்.

விவசாயிகள், சிறு குறு தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்

இந்தக் கருத்தரங்கில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மத்திய தொழில் துறை அமைச்சக அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details