முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட புளியம்பட்டியில் பரம்பிக்குளம், ஆழியாறு திட்டம் தேவம்பாடி பகிர்மான வாய்க்கால் பகுதிகளில் குடிமராமத்து பணி ரூ. 48 லட்சம் செலவில் நடைபெறுகிறது. இதனையடுத்து சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அங்கு பூமி பூஜை நடைபெற்றது.
குடிமராமத்து திட்ட நிதியால் விவசாயிகள் மகிழ்ச்சி - பொள்ளாச்சி ஜெயராமன் - பொள்ளாச்சி ஜெயராமன்
கோயம்புத்தூர்: முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ 7 கோடியே 30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு விவசாயி என்பதால் கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி குடி மராமத்து திட்டத்தின் கீழ் பணிகள் தொடங்க ரூ 7 கோடியே 30 லட்சம் ரூபாயை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார்.
பரம்பிக்குளம், ஆழியாறு பாசன விவசாயிகளின் தேவைகளை முதலமைச்சர் செய்து தருகிறார். காண்டூர் கால்வாய் புனர் அமைக்க ரூ 240 கோடியும், மேலும் ரூ 70 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நான்கு லட்சம் ஏக்கர் விவசாயம் பயன் பெறும் வகையில் பரம்பிக்குளம் மெயின் கால்வாய் புனரமைக்க ரூ 120 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர் என தெரிவித்தார்.