ஈஷா நிர்வாகம் நதிகளை மீட்போம் என்று ஒரு இயக்கத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. இந்த இயக்கத்தின் நோக்கம் நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்பதே ஆகும். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு விவசாய சங்கமும் அதற்கு ஆதரவு அளித்து காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தைத் துவக்கியுள்ளது.
ஈஷாவின் கொள்கைகளுக்கு ஆதரவு கொடுத்த விவசாய சங்கம்! - ஈஷாவின் கூக்குரல் இயக்கம்
கோவை: நதிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கிய ஈஷாவிற்கு, காவேரி கூக்குரல் இயக்கம் எனும் விவசாய சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கோவை பத்திரிகையாளர் சந்திப்பில் அதன் நிர்வாகி செல்லமுத்து பேசுகையில், "உலக வெப்பமயமாதல், வறட்சி, ஆட்கள் பற்றாக்குறை, நீர்ப் பற்றாக்குறை போன்றவற்றினாலே விவசாயம் செய்ய முடியாமல் போகிறது. இதைக் கருத்தில் கொண்டு இவ்வியக்கத்தின் மூலம் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதில் முதல்கட்டமாக அடுத்த 4 ஆண்டுகளில் 73 கோடி மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் காவிரி நதிப்படுகையில் உள்ள விவசாய நிலங்களில் 33 சதவீதம் வேளாண் காடாக மாற்ற முடியும்' என்றார்.