கோயம்புத்தூர் மாவட்டம், மணியகாராம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கிதர் முகமது(66), மகேந்திரன் (39) என்ற இருவரை கள்ளநோட்டு வைத்திருந்ததற்காகக் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி, சரவணம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கள்ள நோட்டுகளை அச்சடித்தது நாடகம் பகுதி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சூரியகுமார்(30) எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சூரிய குமாரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 ஆயிரம் ரூபாய், 200 ரூபாய் என மூன்று லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள், அது அச்சடிக்கும் கருவிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மூன்று பேரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று காவல் ஆணையர்(குற்றப்பிரிவு), துணை ஆணையர்(குற்றப்பிரிவு), குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சங்கீதா ஆகியோர் இந்த குற்றவாளிகளை வெளியே விட்டால், சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்புள்ளது என்றும் கள்ள நோட்டுப் புழக்கத்தை, இவர்கள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளதால், இவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்.
கள்ள நோட்டு அச்சடித்த மூன்று பேர் இவரின் பரிந்துரையை கோவை மாநகர காவல் ஆணையர் ஏற்று, மூவரையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், கைது செய்யும் படி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மூவரும் கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க:கள்ள நோட்டை மாற்ற முயன்ற கேரள இளைஞர் கைது!