தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு - தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு

கோயம்புத்தூர்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கைக்கான தேதியை 18 நாள்கள் நீட்டித்துள்ளது.

வேளாண்மைப் பல்கலைக்கழகம்
வேளாண்மைப் பல்கலைக்கழகம்

By

Published : Sep 16, 2020, 3:58 PM IST

கோயம்புத்தூர் லாலிரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டித்துள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிவரும் 14 உறுப்பு கல்லூரிகள், 28 இணைப்புகக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 10 இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு 2020-21ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை 18 நாள்கள் நீட்டித்துள்ளது.

அதன்படி செப்டம்பர் 17ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக இருந்த நிலையில் தற்போது அக்டோபர் 5 வரை நீட்டித்துள்ளது.

வேளாண்மைப் பல்கலைக்கழக அறிக்கை

கோவிட்-19 பரவல் காரணமாக இணையத்தில் விண்ணப்பக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்கள் கோரிக்கைவிடுத்து வந்ததால் தேதியை நீட்டித்து உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் தரவரிசைப் பட்டியல் தேதி அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details