தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமருக்கு துரோகம் செய்ய முயன்றவர் ஈபிஎஸ்... கோவை செல்வராஜ் - கோவை செல்வராஜ்

எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு துரோகம் செய்ய முயன்றவர் என அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியின் கோவை மாநகர மாவட்டச்செயலாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு துரோகம் செய்ய முயன்றவர் ஈபிஎஸ் - கோவை செல்வராஜ்
பிரதமருக்கு துரோகம் செய்ய முயன்றவர் ஈபிஎஸ் - கோவை செல்வராஜ்

By

Published : Aug 22, 2022, 5:15 PM IST

Updated : Aug 22, 2022, 6:17 PM IST

கோயம்புத்தூர் ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள பாபா இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் கோவை மாநகர மாவட்டச்செயலாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களைச்சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”நேற்று(ஆக.21) கே.பி. முனுசாமி செய்தியாளர் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களைத் தவறாக கொச்சைப்படுத்திப்பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஜெயலலிதாவால் விரட்டி அடிக்கப்பட்டவர் கே.பி.முனுசாமி. அப்படியிருந்தவரை கட்சியில் 2ஆம் தலைவராக வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிசாமியே முனுசாமிக்கு எதிராகப்பேசியபோதும் ஆதரவு கொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம் தான். ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் உழைக்கவில்லை என்று சொல்கிறார். ஆனால் அம்மா ஜெயலலிதா ஓ.பன்னீர்செல்வத்தைத் தான் பாக்கியம் எனக் கூறினார்.

விஸ்வாசம் மிக்க தொண்டன் என்ற பெயரை அம்மா ஜெயலலிதாவிடம் வாங்கியவர் ஓ.பன்னீர்செல்வம். அவரைப் பற்றி பேச யாருக்கும் தகுதி, யோக்கியதை கிடையாது. வருமான வரிச்சோதனையின்போது தொண்டர்களை அடியாட்கள் போன்று வீட்டின் முன்பு குவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். 1000 கோடி செலவு செய்து பதவி வரவில்லை என்று எடப்பாடி பழனிசாமி, முனுசாமியை வைத்துப்பேசுகிறார். அதிமுகவில் தொண்டர்கள் ஒற்றுமையாக உள்ளனர்.

இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. கோடநாட்டில் கொலை கொள்ளை நடந்துள்ளது. ஜெயலலிதாவின் வீட்டிற்கு காவல் போடாதவர் எடப்பாடி பழனிசாமி. அம்மா ஜெயலலிதாவின் வீட்டை தனியார் வீடு என்றவர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 4 அரை வருடங்களில் செய்த தவறுகளைப்பட்டியலிட்டு வெளியிடுவோம்.

நாங்கள் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் இரண்டு முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். விரைவில் மற்றவர்கள் மீதான பட்டியலை வெளியிடுவோம். அதிமுக தலைமை அலுவலகத்தில் மது அருந்துவது, மாமிசம் சாப்பிடுவது போன்ற செயல்கள் எல்லாம் நடைபெறுகின்றன.

வங்கியில் இருந்த கோடிக்கணக்கான பணத்தை பாதுகாப்பாக பார்த்துக்கொண்டவர் ஓ.பன்னீர்செல்வம் தான். நீதிமன்றம் ஜூலையில் நடத்திய கூட்டம் முறையானது அல்ல என்றுள்ளது. தளவாய் சுந்தரம் கட்சி பைலாவை(By Law) முதலில் படிக்க வேண்டும். கட்சி அலுவலகத்தில் விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லை.

பிரதமருக்கு துரோகம் செய்ய முயன்றவர் ஈபிஎஸ் - கோவை செல்வராஜ்

ஓ.பன்னீர்செல்வம் ஒரு முதலமைச்சர் ஆக இருந்து மற்றொருவரை முதலமைச்சராக அறிவித்தவர். கட்சியின் தோல்விக்கு காரணம், எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவின் சீட்டுக்கு துரோகம் செய்பவர் எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வத்தின் தீர்ப்புக்குப் பின் கட்சி அலுவலகத்துக்குள் செல்வார்.

கட்சித் தலைவரும் ஓ.பன்னீர்செல்வம் தான் பொருளாளரும் அவர் தான். சசிகலா கட்சியின் உறுப்பினராக எப்பவும் போல இருப்பார். பிரதமருக்கு துரோகம் செய்ய முயன்றவர் எடப்பாடி பழனிசாமி. கூடிய விரைவில் அவ்விவகாரம் தெரியவரும். கொடி, கட்சி, சின்னம் அனைத்தும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தான் இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மத்திய அரசின் திட்டங்களை வித்தியாசமும் கருதாமல் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் - வானதி சீனிவாசன்

Last Updated : Aug 22, 2022, 6:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details