கரூரிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆண்டான்கோயில் ஜீவா நகர் பகுதியில், தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இடையூறாக வியாபாரிகள் கடைகளை நடத்தி வந்தனர்.
கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்! - Coimbatore National Highway
கரூர்: கோயம்புத்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த கடைகளை நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் அகற்றினர்.
Encroachment
இதையடுத்து, சாலையில் நடத்தி வந்த கடைகளுக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் முறையாக நோட்டீஸ் அனுப்பினர். இதில் பலர் கடைகளை காலி செய்தனர். இருப்பினும் ஒரு சிலர் கடைகளை காலி செய்யாமல் இருந்ததன் அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கடையில் இருந்த பொருள்களை வெளியே வைத்து விட்டு பொக்லைன் இயந்திரம் மூலம் கடைகளை இடித்தனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.