கோவை: பெருந்துறையில் மதி ஈமு பார்ம்ஸ் நிறுவனம் கடந்த 2012ஆம் ஆண்டு மக்களைக் கவரும் வண்ணம் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியது.
இந்தப் பண்ணை திட்டத்தின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் முன் பணமாகச் செலுத்தினால், மாதம் ஆயிரம் ரூபாய், இரண்டு லட்சம் செலுத்தினால் மாதம் 10 ஆயிரம் ரூபாய் அளிப்பதாகத் திட்டங்களை அந்நிறுவனம் விளம்பரப்படுத்தியது.
மேலும் செலுத்திய தொகையை இரண்டு ஆண்டுகள் கழித்துத் திருப்பி தரப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில் அந்நிறுவனம் மக்கள் செலுத்திய தொகைகளைத் திரும்பத் தரவில்லை என உடுமலையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மதி பார்ம்ஸ் நடத்தி வந்த தங்கவேல், தனசேகரன் ஆகியோர் மீது வழக்குத் தொடுத்தார்.
10 ஆண்டுகள் சிறை
இதில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். 63 நபர்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். 19 நபர்களுக்கு மட்டுமே அவர்கள் கட்டிய தொகை திரும்பத் தரப்பட்டது எனப் புகாரில் தெரிவித்திருந்தார்.
உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு நேற்று (ஆக.27) விசாரணைக்கு வந்தது. கோவை முதலீட்டாளர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, தங்கவேலுவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியும் 1 கோடியே 33 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.
மேலும் தனசேகர் என்பவரை விடுதலை செய்தும் உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க : இளைஞரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கு: பெண் காவல் ஆய்வாளர் சிறையில் அடைப்பு