தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலில் காயத்துடன் அவதிப்பட்ட யானை உயிரிழப்பு

கோயம்புத்தூர்: காலில் பலத்த காயத்துடன் அவதிப்பட்டு வந்த யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

காலில் காயத்துடன் அவதிப்பட்ட யானை உயிரிழப்பு
காலில் காயத்துடன் அவதிப்பட்ட யானை உயிரிழப்பு

By

Published : Dec 17, 2020, 10:00 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் முகாம்கள் உள்ளன. வால்பாறையை அடுத்த மானாம்பள்ளி வனச்சரக உட்பட்ட சரகத்தில் ஒரு யானை எழுந்து நடக்க முடியாமல் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து வனத்துறையினா் அங்கு சென்று பாா்த்தபோது மூன்று வயதுடைய ஆண் யானை காலில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

யானைக்கு சிகிச்சை

மானாம்பள்ளி வனச்சரக அலுவலா் மணிகண்டன் முன்னிலையில் கால்நடை மருத்துவர் மெய்யரசன் காயமடைந்த யானைக்கு சிகிச்சை அளித்தார். ஆனால் சிகிச்சை பலனின்று யானை உயிரிழந்தது.

இதுதொடர்பாக வனச்சரகர் மணிகண்டன் கூறுகையில், ” பலத்தக் காயமடைந்த அந்த யானைக்கு முதற்கட்டமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கு தீவிர சிகிச்சை அளித்து கண்காணிப்பில் வைக்கப்பட்ட நிலையிலும் உயிரிழந்தது. உடற்கூராய்வு செய்யப்பட்ட யானையின் உடல், தற்போது பிற வன விலங்குகளின் உணவுக்காக அதே பகுதியில் விடப்பட்டது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:வனவிலங்கு கணக்கெடுப்பு: யானை தாக்கி இருவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details