தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒற்றை யானையை வனத்திற்குள் விரட்ட முடியாமல் தவிப்பு ! - pollachi

பொள்ளாச்சி : டாப்சிலிப்பில் புகுந்த ஒற்றை யானையை வனத்திற்குள் விரட்ட முடியாமல் கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையினர் தவித்துவருகின்றனர்.

pollachi elephant

By

Published : Aug 14, 2019, 3:59 PM IST

பொள்ளாச்சியை அடுத்துள்ள டாப்சிலிப் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு புள்ளிமான், கரடி, புலி, சிறுத்தை புலி, கருஞ்சிறுத்தை போன்ற வனவிலங்குகள் வசித்துவருகின்றன. தற்போது டாப்சிலிப் பகுதியில் மூங்கில் குருத்துகள் அதிகளவில் உள்ளன.

இதை உண்பதற்கு காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஒற்றை யானை டாப்சிலிப்பில் உள்ள விடுதியில் உலவிவருகிறது. இந்த காட்டு யானையை வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

ஒற்றை யானை

மேலும் இரவு நேரங்ளில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதியைவிட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details