பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உலக யானைகள் தின விழா எளிமையான முறையில் நடைபெற்றது. டாப்ஸ்லிப்பில் உள்ள கோழிக்கமுதியில் மொத்தமாக 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உலக யானைகள் தினத்தையொட்டி இங்குள்ள கலீம், அரிசி ராஜா, சின்னதம்பி உள்ளிட்ட யானைகளுக்கு சிறப்பு பூஜை செய்து கரும்பு, பழங்களை அளித்து மரியாதை செய்தனர்.
யானைகள் தினத்தைக் கொண்டாட ஒன்று திரண்ட ஆனைமலை யானைகள்!
கோவை : உலக யானைகள் தினத்தை முன்னிட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து கரும்பு, பழங்கள் அளித்து மரியாதை செய்யப்பட்டது.
மேலும், சிறப்பாகப் பணியாற்றிய வனத் துறையினர், சமூக ஆர்வலர்கள், யானைகள் வளர்ப்பு முகாமில் பணிபுரியும் மாவுத், பாகன் ஆகியோருக்கு கேடயங்களும் வழங்கப்பட்டன.
பின்னர் விழாவில் பேசிய ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர், ”காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து பாதுகாத்து வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வனத்துறையினராகிய நாங்கள் தயாராக உள்ளோம்" எனத் தெரிவித்தார்.