பொள்ளாச்சி (டிச-21) அருகே உள்ள கோமங்கலம் புதூர் சங்கம்பாளையம் பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடப்பதாக கோமங்கலம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அனுமதியின்றி சேவல் சண்டையில் ஈடுபட்ட எட்டு பேர் கைது1 - பொள்ளாச்சி அருகே சேவல் சண்டை
கோவை: பொள்ளாச்சி அருகே சேவல் சண்டையில் ஈடுபட்ட எட்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற உதவி ஆய்வாளர் அழகேசன் தலைமையிலான காவல் துறையினர் சோதனை மேற்கொண்டதில், சேவல்களை மோத வைத்து சூதாட்டம் ஆடியது தெரியவந்தது.
இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக செந்தில்குமார், பரமேஸ்வரன், சரவணகுமார் தினேஷ்குமார், அஜித் குமார், சதீஷ்குமார், முருகானந்தம், நவீன் பாரதி ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்குப் பயன்படுத்திய 3 சேவல் மற்றும் 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.