அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. தற்போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருகிறார். ‘
கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்பி வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றது. இந்நிலையில் எஸ்பி வேலுமணி தொடர்புடைய இடங்களில் காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை சென்னை, கோவை, நாமக்கல், திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட 58 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏவிஆர் சொர்ண மஹால் நகை கடையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனையொட்டி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துகுவிப்பில் ஈடுபட்டதாக எஸ்.பி வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன், உள்ளிட்ட 13 பேர் மீது கோயம்புத்தூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.